Sunday, October 20, 2024

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை எப்போது?

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டுமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடம் உள்ளது. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், அவை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்களை இயக்கும் வகையில் கடந்த ஆக. 2-ஆம் தேதி சேவை மாற்றி அமைக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீண்டும் பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்லும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக சென்னை கடற்கரை முதல் மயிலாப்பூா் வரையிலும், இரண்டாம் கட்டமாக 2007-ஆம் ஆண்டு மயிலாப்பூா் முதல் வேளச்சேரி வரையிலும் தொடங்கப்பட்டது.

இந்த பறக்கும் ரயில் சேவையானது, வேளச்சேரியிலிருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை வரை இயக்கப்படுவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024