Tuesday, September 24, 2024

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.461.69 கோடி செலவில் 3 பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.167.28 கோடி செலவில் 9 பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.109.58 கோடி செலவில் 79 பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.28.42 கோடி செலவில் 11 பணிகள், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் ரூ.3 கோடி செலவில் 1 பணி என மொத்தம் ரூ.800.75 கோடி செலவிலான 104 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும்,

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1153.27 கோடி மதிப்பீட்டிலான 19 பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தின் சார்பில் ரூ.35.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டிலான 1 பணி, என மொத்தம் ரூ.1,192.45 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்களை வழங்குதல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர்களின் களப்பணிக்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலான 10 புதிய வாகனங்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 1 முதல் 15 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான 58 கழிவுநீரகற்று வாகனங்கள், என மொத்தம் 68 வாகனங்களின் சேவைகளை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024