சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை(17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்துமுனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).

இதையும் படிக்க: பெங்களூருவிலும் கன மழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்

காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:

➢ பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோரயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

• காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024