சென்னை ரேஸ் கிளப் விவகாரம் – பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை ரேஸ் கிளப் விவகாரம் – பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

வாடகை பாக்கி 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, குத்தகை ரத்து செய்யப்பட்டதாக கூறி, ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், குத்தகை ரத்து விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்