செய்திகள் சில வரிகளில்……

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, ஆகஸ்டு 23-ம் தேதி உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

* ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கணைகளுக்கு பிரதமர் மோடி, முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* நிதி ஆயோக் கூட்டத்தில் தன்னிடம் பாரபட்சம் காட்டியதாகவும், வெறும் 5 நிமிடங்களே பேச வாய்ப்பளித்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

* மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

* மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* மகளிர் ஆசிய கோப்பையின் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது.

* பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

* நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

* பாரீஸ் ஒலிம்பிக்: கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது.

* ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை சீனா கைப்பற்றியது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்த பதக்கம் கிடைத்தது.

You may also like

© RajTamil Network – 2024