சொத்துக் குவிப்பு வழக்குகள்.. கர்நாடகாவில் 56 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஊழல் செய்து சொத்து சேர்த்த அதிகாரிகள் யார்? யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த லோக் ஆயுக்தா அமைப்பு, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வாரண்ட் பெற்று நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அதன்படி கலபுரகி, மத்யா, தாவங்கரே, சித்ரதுர்கா, தர்வாட், பெலகாவி, கோலார், மைசூர், ஹசன் மற்றும் சித்ரதுர்கா ஆகிய 9 மாவட்டங்களில் 11 வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே சமயத்தில் 56 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்டலோக் ஆயுக்தா அதிகாரிகள், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீஸ் குழுக்கள் இணைந்து இந்த சோதனையை நடத்துகின்றனர். இதனால் ஊழல் செய்து சொத்து சேர்த்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் பெங்களூரு, பிடார், ராமநகரா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிப்ரவரி மாதம் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024