Friday, September 20, 2024

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு

by rajtamil
0 comment 57 views
A+A-
Reset

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட புல்லட் ரெயில் சேவை, தற்காலிக ரத்து செய்யப்பட்டது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இஷிகாவா மாகாணத்தில் இன்று காலை 6.31 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனால், வஜிமா மற்றும் சுசு நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன.

இதேபோன்று நிகடா மாகாணத்தில் உள்ள நோடோ நகரம், நனாவ் மற்றும் அனாமிசு நகரம் மற்றும் சில பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. நிலநடுக்கம் தொடர்ச்சியாக கிழக்கு ரெயில்வே, புல்லட் ரெயில் சேவையை தற்காலிக ரத்து செய்து உள்ளது. மின்சார செயலிழப்பால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.

எனினும், காலை 6.50 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

You may also like

© RajTamil Network – 2024