ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை கடிதம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஜப்பானில் நேற்று முன் தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோக்கியோ,

ஜப்பானில் மீண்டும் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் மியாசாகியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது 7:1 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்புள்ளது. அந்நாட்டு அரசு இயற்கைப் பேரிடர்களுக்குத் தயார் நிலைக்கான ஆலோசனையை அறிவித்துள்ளது. எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகள் அறிவிக்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இது தொடர்பாக கடிதம் ‛எக்ஸ்' வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024