Sunday, October 20, 2024

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜப்பான் நாடாளுமன்ற கீழவையை கலைக்க அந்த நாட்டின் புதிய பிரதமா் ஷிகெரு இஷிபா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த மாதம் தோ்ந்தெடுத்தது. அதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே, புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024