ஜமால் முகமது

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஜமால் முகமது

ஜமால் முகமது (இந்திய வர்த்தக இளவரசர், தேசியவாதி)- ஜெ.பி.பி.மோரே (தமிழில்- ச.அ.சையத் அகமது பிரோசு); பக்.172; ரூ.250; ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020.

சென்னையில் பிறந்த ஜமால் முகமது (1882-1949), தோல் வணிகத்தில் மிகப் பெரிய வர்த்தகராய் விளங்கினார்.

இருப்பினும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார் அவர். மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களோடு ஜமால் முகமது கொண்டிருந்த நல்லுறவு, சுதந்திரத்துக்காக அவருடைய பெரும் பங்களிப்பு, 1931-இல் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் வர்த்தகப்பிரதிநிதியாகப் பங்கேற்றது, அரசியல்வாழ்வு, ஹிந்து- முஸ்லிம் நல்லுறவுக்காகப் பாடுபட்டது, தேசிய ஒருமைப்பாடு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது உள்பட பல்வேறு விஷயங்களை நூலாசிரியர் தெளிவாக எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்துக்காக காந்திக்கும், கிலாபத் இயக்கத்துக்காக ராஜாஜிக்கும் தொகை நிரப்பப்படாத காசோலையை நிதியாக அளித்தது, நாட்டில் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கியது; பெருமளவு நிதியுதவி அளித்தது; ஜமால் முகமதுவின் பெருந்தன்மையையும் தேசப்பற்றையும் பறைசாற்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஜமால் முகமதுவின் வாழ்க்கை வரலாற்றோடு நின்றுவிடாமல், ராவுத்தர்களின் எழுச்சியையும் அவர்களுடைய தொழில் புரட்சி, சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பு போன்றவற்றையும் நூலாசிரியர் அலசுகிறார்.

லண்டனில் ஜமால் முகமது ஆற்றிய உரையைப் படிக்கும்போது, அவருடைய தொலைநோக்குப் பார்வையைச் சிந்திக்க வைக்கிறது. தேசப் பற்றாளர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல் இது.

You may also like

© RajTamil Network – 2024