ஜம்மு காஷ்மீரில் எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய கவர்னருக்கு அதிகாரம்: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், மெகபூபா முப்தி கட்சிதான் கிங் மேக்கராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் துணை நிலை கவர்னருக்கு உள்ள எம்.எல்.ஏக்களை நியமிக்கும் அதிகாரம் குறித்து அங்குள்ள கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற இட ஒதுக்கீ்டு படி நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவர்கள் சட்டசபை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம். சட்டம் இயற்றப்படும் போது மசோதாவிற்கு ஆதரவு அளிக்கலாம். எனவே நாளைய ஓட்டு எண்ணிக்கையில் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டால், துணை நிலை கவரான மனோஜ் சின்ஹா தான் நியமிக்கும் 5 எம்.எல்..க்களை துணை கொண்டு ஆட்சியை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார். ஏற்கனவே காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

You may also like

© RajTamil Network – 2024