Sunday, September 22, 2024

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசுகிறார். 1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் பாஜக 43 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024