ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் பலி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற் வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இறுதிகட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில், ஜம்முவின் கதுவா மாவட்டம் கோக் மண்ட்லி பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், 2 போலீசார் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

‘கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிரிகளுக்கு அச்சம்’ – திருமாவளவன்

470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Mumbai: Revd Dr. Ananda Maharajan’s Book On Tamil Christian Heritage To Be Released Today At St. John’s Tamil Church In Goregaon