ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தல்: 11 மணி நிலவரம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீரில் 2-வது கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(செப்.25) காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மையங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

கடும் குளிர் மற்றும் பனி காரணமாக வாக்குப் பதிவு மந்தமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டத் தேர்தலில் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 13,12,730 ஆண் வாக்காளர்கள், 12,65,316 பெண் வாக்காளர்கள், 53 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 25,78,099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

26 இடங்களுக்கான தேர்தலில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 239 வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024