Wednesday, September 25, 2024

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதிபோதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்ட்ட ஜாபர் சாதிக் வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்(கோப்புப்படம்)

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 3,500 கிலோ சூடோபீட்ரின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா்.

தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபா் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் ஜாபர் சாதிக் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

காவல் முடிந்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 12 நாட்கள் அமலாக்கத்துறை காவல் கோரிய நிலையில் 4 நாட்களுக்கு விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஜாபா் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி தில்லி போதைப்பொருளஅ தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்தாலும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கிலும் ஜாபர் சாதிக் கைதியாகி உள்ளதால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.

You may also like

© RajTamil Network – 2024