Tuesday, September 24, 2024

ஜார்க்கண்ட் அரசியல்: பாஜகவில் ஐக்கியமானார் சம்பாய் சோரன்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ராஞ்சியில் நடந்த விழாவில் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக்கினார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் பதவி விலகினார். இந்நிலையில், முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தன்னை அவதிமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

தொடர்ந்து, டெல்லி சென்ற சம்பாய் சோரன் பாஜக தலைவர்களையும் சந்தித்தார். அவரை டெல்லி அழைத்து சென்ற அசாம் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, அமித் ஷாவை சந்திக்க வைத்தார். இதன்பின் சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று ராஞ்சியில் நடந்த விழாவில் சம்பாய் சோரன் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

Also Read :
பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்.. காவல்நிலையத்தில் நடந்த கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

விளம்பரம்

விழாவில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜகவில் இணைந்த பிறகு பேசிய சம்பாய் சோரன், “பழங்குடியினரின் அடையாளத்தை காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி பணயம் வைத்துள்ளது. அதனை நீக்கி மக்களுக்கு நீதி வழங்குவதென நான் உறுதி பூண்டுள்ளேன்” என்று கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சாய்ந்திருப்பது ஜார்க்கண்ட் அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனினும், இந்த இணைப்பால் ஜார்க்கண்ட் அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
champai soren
,
Hemant Soren
,
jharkhand
,
Politics

You may also like

© RajTamil Network – 2024