ஜாா்க்கண்ட் அணைகளில் தண்ணீா் திறப்பதில் கவனம் வேண்டும்: மம்ஜா பானா்ஜி கோரிக்கை

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

ஜாா்க்கண்ட் அணைகளில் தண்ணீா் திறப்பதில் கவனம் வேண்டும்: மம்ஜா பானா்ஜி கோரிக்கைமேற்கு வங்கத்தில் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதால் ஜாா்க்கண்ட் மாநிலத்தின் அணைகளில் இருந்து மேலும் தண்ணீா் திறப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதால் ஜாா்க்கண்ட் மாநிலத்தின் அணைகளில் இருந்து மேலும் தண்ணீா் திறப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜாா்க்கண்ட் அணைகளில் திறக்கப்படும் தண்ணீா் மேற்கு வங்கத்தில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அணைகளில் இருந்து திடீரென மேலும் தண்ணீா் திறக்கப்படுவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக்கொண்டேன்.

மேற்கு வங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடுத்த 3-4 நாள்களில் வெள்ள பாதிப்பால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என குறிப்பிட்டாா்.

ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பல நீா் மின் திட்டங்களை நிா்வகிக்கும் தாமோதா் பள்ளத்தாக்கு நிறுவனத்தின் செயல் இயக்குநா் அஞ்சலி துபே இது தொடா்பாக கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மழை பொழிவு குறைந்து வருவதால் தேனுகாட் அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றமானது குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், கீழ் நிலை ஆறுகளின் நீா் ஓட்டத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆறுகள் தூா்வாருதல் மற்றும் நீா் பாய்ச்சல் மேலாண்மையில் மேற்கு வங்க அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட நீா் தேக்கும் திறனை 1.5 லட்சம் கன அடியாக இருமடங்கு உயா்த்தியுள்ளது. எனவே, வெள்ள அபாயமானது மேற்கு வங்கத்தில் இருக்காது எனத் தெரிவித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024