ஜியு-ஜிட்சு பயிற்சியில் அசத்திய ராகுல் காந்தி… வைரல் வீடியோ

ஜியு-ஜிட்சு பயிற்சியில் அசத்திய ராகுல் காந்தி… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!

ராகுல் காந்தி

அரசியலில் மட்டுமின்றி தற்காப்பு கலையிலும் அதிரடி காட்ட தெரியும் என்று தனது வேறு முகத்தை காட்டியுள்ளார் ராகுல்காந்தி.

தேசிய விளையாட்டு தினத்தை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தான் மேற்கொண்ட ஜியு-ஜிட்சு விழிப்புணர்வு முயற்சியை விவரித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணத்தின் போது, தினமும் மாலை தனது முகாமில் ஜியு-ஜிட்சு பயிற்சியை மேற்கொண்டதாக கூறியள்ள ராகுல்காந்தி, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் கற்று தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

#JUSTIN
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் தற்காப்புக் கலையில் ஈடுபட்ட வீடியோ#RahulGandhi#News18tamilnadu | https://t.co/7dpn9FCtgjpic.twitter.com/svldIwFp2y

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 29, 2024

விளம்பரம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தற்காப்பு பயிற்சிகளில் ஒன்றான ஜியு-ஜிட்சு, தியானம், அய்கிடோ உள்ளிட்டவை அடங்கியதாகவும், வன்முறையற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பின்குறிப்பாக பாரத் டோஜோ யாத்ரா விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
Rahul Gandhi

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்