ஜீவாவின் ‘பிளாக்’ பட டிரெய்லர் ரிலீஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படத்தின் டிரெய்லர் வெளியானது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

It's time to experience the thrill! Here is the official trailer of #BLACK. https://t.co/dHlpQJB1uZ@JiivaOfficial@priya_Bshankar@kgBalasubramani@actorvivekpra#ShivaShahra@iamswayamsiddha@gokulbenoy@SamCSmusic@madhankarky@ArtSathees@philoedit#MetroMagesh… pic.twitter.com/lXIIm0afHC

— Jiiva (@JiivaOfficial) September 25, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024