Monday, October 21, 2024

ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.5) வழிபாடு மேற்கொண்டார்.

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரம் வந்துள்ளார்.

இதையும் படிக்க: ரயில்வே தனியாா் மயமாக்கப் படாது: மத்திய அமைச்சா் தகவல்

இன்று காலை நான்டெட் விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை, பாஜக தலைவர் அசோக் சவான் வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போஹராதேவிக்குச் சென்றார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிரம் வந்துள்ளார். வாஷிமில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

In Washim, tried my hand at the Nangara, which has a very special place in the great Banjara culture. Our Government will make every possible effort to make this culture even more popular in the times to come. pic.twitter.com/snsZXobZLT

— Narendra Modi (@narendramodi) October 5, 2024

பின்னர், போஹராதேவியில் உள்ள சந்த் செவலால் மகாராஜா மற்றும் சந்த் ராம்ராவ் மகாராஜா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் சிறுமி கடத்தப்பட்டுக் கொலை!

மேலும், வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களையும், அதைத்தொடர்ந்து தாணேவில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

மும்பையில் ஆரே – பிகேசி இடையே 3வது கட்ட மெட்ரோ ரயில் சேவை திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். பிகேசியில் இருந்து சாந்தாகுருஸ் வரை சென்று மீண்டும் பிகேசிக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி, மும்பை, தாணேவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024