Friday, September 20, 2024

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜி.வி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

38 நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோவை பொறுத்தவரை பின்னணியில் பாடல் ஒலிக்க திருமண நிகழ்வு ஒன்றில், பிரியங்கா மோகன் நடனமாடுவது போல காட்சிப்படுத்தப்படுள்ளது. ஜெயம் ரவியும் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே ஹாரிஸ் ஜெயராஜின் 'கம்பேக்' எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Super elated to announce y'all that @actor_jayamravi ‘s #Brother Audio Rights is bagged by us Get ready for a Colorful Musical Fiesta A @Jharrisjayaraj mucial ➡️https://t.co/lTKU17HPbk@Screensceneoffl@rajeshmdirector@priyankaamohan@bhumikachawlat… pic.twitter.com/gIvfQTIYrU

— Think Music (@thinkmusicindia) July 6, 2024

படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024