Saturday, September 21, 2024

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் – 140 விமானங்கள் ரத்து

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பெர்லின்,

காலநிலை மாற்றம் என்பது தற்போதைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே 2030-ம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேறுவது குறித்த சர்வதேச ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட வேண்டும் என அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் `லாஸ்ட் ஜெனரேசன்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் அங்குள்ள பிராங்பேர்ட் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் விமான நிலையத்தின் ஓடுபாதையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதேசமயம் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க அந்த நாட்டின் சட்டத்தில் கடந்த வாரம் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024