Sunday, September 22, 2024

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

க்வாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லே நகரிலுள்ள ஜோ பைடன் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை ஆரத்தழுவி வரவேற்ற ஜோ பைடன்

அங்கு இரு தலைவர்களும் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவது, இரு நாடுகளின் உலகளாவிய கூட்டு யுக்தியை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

க்வாட் உச்சி மாநாடு

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் செப். 21-ல் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024