Saturday, September 21, 2024

‘ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில்’ – யோகி ஆதித்யநாத் பேச்சு!

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்து கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒளரங்கசீப்பின் 16-வது நூற்றாண்டில் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் ஞானவாபி நிலத்தை மீண்டும் கோயில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர 1991-ல் வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2023, டிசம்பர் மாதம் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், மசூதி கட்டப்பட்ட நிலத்தில் முன்னர் இந்து கோயில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது.

நர்மதையை ஒட்டிய நகரங்களில் மது, இறைச்சிக்குத் தடை: ம.பி. முதல்வர்

இந்நிலையில் ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் முஸ்லீம்கள் வழிபாடு செய்யும் நிலையில் அங்கு பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை வாராணசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஞானவாபியை மசூதி என்று அழைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில் விஸ்வநாத்(சிவன்) கோயில்' என்று தெரிவித்தார்.

அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்டதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்

மேலும், 'பக்தர்கள் அதன் உண்மையான அடையாளம் அல்லது பெயரைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை மிகப்பெரிய தடையாகப் பார்க்கிறார்கள் என்றும் கடந்த காலத்திலே நமது சமூகம் இதனை அடையாளம் கண்டிருந்தால், நம் நாடு ஒருபோதும் காலனித்துவமாக இருந்திருக்காது என்றும் தெரிவித்தார்.

இப்போது வாராணசி என்று அழைக்கப்படும் காசியில், ஆதி சங்கராச்சாரியார் சிவபெருமானை சந்தித்தது குறித்த ஒரு கதையையும் முதல்வர் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024