டக்வொர்த் லீவிஸ் விதி கண்டுபிடிப்பாளர் ஃபிராங்க் டக்வொர்த் மரணம்!

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

டக்வொர்த் லீவிஸ் விதி கண்டுபிடிப்பாளர் ஃபிராங்க் டக்வொர்த் மரணம்! டக்வொர்த் லீவிஸ் விதி கண்டுபிடிப்பாளர் ஃபிராங்க் டக்வொர்த் காலமானார்.ஃபிராங்க் டக்வொர்த்ஃபிராங்க் டக்வொர்த்

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லீவிஸ் (டிஎல்எஸ்) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.

ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்ததாக ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ராங்க் டக்வொர்த் மற்றும் சக புள்ளியியல் நிபுணரான டோனி லீவிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட டக்வொர்த் லீவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறை 1997 இல் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 2001 இல் துண்டிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை அமைப்பதற்கான நிலையான முறையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டக்வொர்த் மற்றும் லீவிஸின் ஓய்வுக்குப் பிறகு இந்த முறை டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் முறை என மறுபெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த முறையில் ஆஸ்திரேலிய புள்ளிவிவர நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் சில மாற்றங்களைச் செய்தார்.

டக்வொர்த் மற்றும் லீவிஸ் இருவரும் ஜூன் 2010 பிரித்தானிய பேரரசில் உறுப்பினர் பதவியைப் பெற்றனர்.

டக்வொர்த் லீவிஸ் முறையானது சிக்கலான புள்ளியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024