Friday, September 20, 2024

டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.1,734 கோடி அதிகரிப்பு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

2023 – 24-ம் ஆண்டில் 4.64 லட்ச லிட்டர் விஷ சாராயம் அழிக்கப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:-

* தமிழ்நாட்டில் எரி சாராய கடத்தல், போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

* மாநிலம் முழுவதும் 101 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.

* போலி மதுபான கடத்தலை தடுக்க மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* 2023 – 24-ம் ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12,431 விஷ சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,422 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். 4.64 லட்ச லிட்டர் விஷ சாராயம் அழிக்கப்பட்டுள்ளது.

* மெத்தனால் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகள், மெத்தனால் வைத்திருக்க உரிமம் பெற்ற ஆலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சோதனையிட வலியுறுத்தல்.

* மெத்தனால் உரிமம் வைத்திருக்கும் அலகுகளை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.1734.54 கோடி அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் டாஸ்மாக்கில் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. 2023-24-ம் ஆண்டில் ரூ.45,855.67 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024