டிசம்பர் வெளியீடாக வீர தீர சூரன்?

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

மகாராஜாவால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு கலைத்தாயின் இளைய மகன் என இயக்குநர் அருண் குமாரை எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், இப்படம் டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிச. 20 ஆம் தேதி விடுதலை – 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024