Wednesday, November 6, 2024

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,040 கோடி: இடைக்கால பங்காதாயம் எவ்வளவு தெரியுமா?

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,040 கோடி: இடைக்கால பங்காதாயம் எவ்வளவு தெரியுமா?காலாண்டுக்கான நிகர லாபம் மற்றும் இடைக்கால பங்காதாயம் அறிவிப்புடிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,040 கோடி: இடைக்கால பங்காதாயம் எவ்வளவு தெரியுமா?

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சேவைகள் (டிசிஎஸ்) நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.12,040 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலாண்டை ஒப்பிடும்போது நிறுவனம் லாபத்தில் 9 சதவிகித உயர்வை எட்டியுள்ளது.

காலாண்டுக்கான இடைக்கால பங்காதாயமாக பங்கொன்றுக்கு ரூ.10 அளிக்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 20 பங்குதாரர்களுக்கு ஆதாயம் பதிவு செய்யப்படுமெனவும் ஆகஸ்ட் 5 செலுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நிறுவனம் பெரிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து அதன் பங்காணை மதிப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 10.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

பிரான்ஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்திய டிசிஎஸ் பேஸ்போர்ட், அமெரிக்காவில் ஐஓடி (இண்டர்நெட் ஆப் திங்க்ஸ்) ஆய்வகம், லத்தீன் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் சேவைகள் வழங்குவதை விரிவாக்கம் செய்தல் உள்ளிட விரிவாக்கங்களில் நிறுவனம் செயல்பட்டு வருவதாக அதன் சிஇஓ கே. கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.

தலைமை நிதி அலுவலர் சமிர் சேக்சரியா, காலாண்டின் வருடாந்திர ஊதிய உயர்வினால் ஏற்படும் தாக்கம் இருந்தபோதும் தங்களின் செயல்பாட்டு பலத்தால் முன்னெடுத்து செல்வதாகவும் ஆய்வு மற்றும் புத்தாக்கம், திறன்களில் சரியாக முதலீடு செய்வதால் அது இலாபம் மற்றும் பங்குதாரர்களுக்கான நீடித்த மதிப்பை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காலாண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 5,452 ஊழியர்களுடன் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 6.07 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாத அடிப்படையில் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவதை குறிக்கும் தேய்வு விகிதம் 12.1 சதவிகிதமாக உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024