டிட்டோஜாக் போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சருடன் பேசிய பின் முடிவு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து டிட்டோஜாக் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில் தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், டிட்டோஜாக் மாநில நிா்வாகிகளை பள்ளிக் கல்வித் துறை பேச்சுவாா்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி டிட்டோஜாக் மாநில நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

மகாராஷ்டிரத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்தது: 4 பேர் பலி

அப்போது ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக டிட்டோஜாக் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோ ஜாக்) 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தது.

ஆசிரியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்கள்.

டிட்டோ ஜாக் நிர்வாகிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024