Saturday, September 21, 2024

டிரம்புக்கு மாதந்தோறும் ரூ.376 கோடி நிதியுதவி: எலான் மஸ்க் முடிவு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

தேர்தல் முடியும் வரை மாதந்தோறும் இந்த நிதியதவி வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்க உள்ளதாக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கூறியிருந்தார்.

எனினும் அவர் மறைமுகமாக டிரம்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க் வெளிப்படையாக டிரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்புக்கு தேர்தல் வியூகம் வகுப்பதுடன், அவரின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும் 'கிரேட் அமெரிக்கா பிஏசி' என்கிற அரசியல் அமைப்புக்கு 45 மில்லியன் டாலர் (சுமார் ரூ.376 கோடி) வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடியும் வரை மாதந்தோறும் இந்த தொகையை வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் எலான் மஸ்க் தரப்பில் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

You may also like

© RajTamil Network – 2024