Tuesday, September 24, 2024

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் தாமஸ் மேத்யூ யார்?

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் தாமஸ் மேத்யூ யார்?அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் தாமஸ் மேத்யூ பற்றிய தகவல்கள்துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் தனியாக, மன அழுத்தத்துடன் இருந்தவர், பள்ளியின் துப்பாக்கிச் சூடும் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்தபோதும் தனியாகவே இருந்துவந்துள்ளார் எனவும், அவர் ஏதோ விரக்தியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டாலும், டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடுக்கு இதுவரை எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபா் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், அந்நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் பகுதியில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா். அவா் கூட்டத்தில் தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென தொலைவில் இருந்து நபா் ஒருவா் பலமுறை துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. தோட்டா உரசிச் சென்றதை உணா்ந்த டிரம்ப் ஒலிவாங்கி (மைக்) மேடைக்கு கீழே உடனடியாக குனிந்து தற்காத்துக் கொண்டாா். சுற்றியிருந்த சிறப்புப் பாதுகாவலா்கள் சட்டென சுதாரித்து அரண் போல சூழந்து அவரைக் காத்தனா்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டிரம்ப்பின் காதில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில், அவா் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பா்க் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

துப்பாக்கிச்சூட்டின்போது, டிர்ம்ப் பின்னால் இருந்த கூட்டத்தில் பங்கேற்ற பாா்வையாளா்களில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

அப்போது, டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவா் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பாா்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. டிரம்ப்பை தாமஸ் சுட்டபின், சிறப்புப் பாதுகாவலா் துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் உயிரிழந்தாா்.

தற்போது, இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு என்ன காரணம் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவருடைய குடும்ப உறவினர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், உடன் பணியாற்றியவர்கள் யாருமே இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை, ஆனாலும் இவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

அவர் சமூக ஊடகங்களிலும் அவ்வளவாக பயன்படுத்தியதில்லை என்பதும், இதுபோன்ற ஒரு திட்டத்தை தீட்டியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024