டிரம்ப்-ஹாரிஸ் விவாதம்: கைகுலுக்கிக் கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும், இதுவரை ஒருவரை ஒருவர் சந்தித்திராத நிலையில், எவ்வாறு விவாதத்தில் பங்கேற்கும்போது கைகுலுக்கிக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே பலருக்கும் எழுந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த கேள்விக்கான பதிலை மிக நேர்த்தியாக அளித்துவிட்டார் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபா் தோ்தல் வேட்பாளா்களான முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில் இந்த தேர்தல் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர்.

மாலத்தீவு அரசுக்கு மனமாற்றம்? மோடிக்கு எதிரான அமைச்சர்கள் ராஜிநாமா! இந்தியா வரவிருக்கும் அதிபர்!!

விவாதம் தொடங்குவதற்கு முன்பு, அரங்குக்கு வந்த கமலா ஹாரிஸ், நேராக டொனால்ட் டிரம்ப் இருந்த இடத்துக்குச் சென்று, தனது கையை நீட்டி, கமலா ஹாரிஸ் என்று தன்னைத் தானே அறிமுகம் செய்துகொண்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தேர்தல் பிரசாரத்தின் போது, கமலா ஹாரிஸை அவரது இனம் மற்றும் பாலினம் தொடர்பாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி டொனால்ட் டிரம்ப் விமரிசித்து வந்த நிலையில், எந்த தயக்கமும் இன்றி, கமலா ஹாரிஸ், முதல் சந்திப்பை எளிமையாக்கிவிட்டார்.

ஆனால், விவாதம் அதுபோல எளிமையாக செல்லவில்லை. கடுமையான வாதங்களுடன் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே காரசாரமான குற்றச்சாட்டுகள், எதிர்க்கேள்விகளுடன் சென்றது. விவாதம் தொடங்கியதிலிருந்தே, கமலா ஹாரிஸ், தன்னை ஒரு வெற்றி வேட்பாளரைப் போல விரைவாக சித்தரித்துக் கொண்டார். விவாதத்தின்போது, டிரம்ப்பை, "அதே சோர்வான விளையாட்டுப்பிள்ளை" போலவும் கணிக்கும்படி செய்திருந்தார்.

வாதம் தொடங்கியதுமே, லட்சக்கணக்கான வாக்காளர்களின் மனதின் குரலாக இருக்கும் பொருளாதாரத்தை இரு வேட்பாளர்களும் கையிலெடுத்துக்கொண்டனர்.

தற்போது நிர்வாகத்தில் இருக்கும் பல வரி முறைகள் குறித்து ஹாரிஸ் விளக்கம் அளிக்க, டொனால்ட் டிரம்ப், பொருளாதார நிலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, அவர் அமெரிக்க பொருளாதாரத்தை நியாயமற்ற வெளிநாட்டு போட்டிகளிலிருந்து பாதுகாப்பேன் என்று உறுதிமொழி அளித்தார்.

வாக்காளர்களின் மனதை மாற்றுமா இந்த விவாதம்?

அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர்கள் இருவரும், இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய உரையை வைத்துத்தான், 'யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாத வாக்காளர்களை' தங்களது முடிவை எடுப்பார்கள் என்பதால், இந்த விவாதம் இது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024