Saturday, September 21, 2024

டிராக்டரை விற்று டிக்கெட் வாங்கிய பணத்தை இந்தியா மதிப்பாக்கி உள்ளது – பாக். ரசிகர் வீடியோ வைரல்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்ப்பதற்காக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன்னுடைய டிராக்டரை சராசரியாக இரண்டரை லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்று டிக்கெட் வாங்கியுள்ளார்.

நியூயார்க்,

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் வீழ்ந்தது.

முன்னதாக அப்போட்டியை நேரில் பார்ப்பதற்காக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன்னுடைய டிராக்டரை சராசரியாக இரண்டரை லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்றுவிட்டு டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால் கடைசியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததால் அந்த ரசிகர் மைதானத்திலேயே தன்னுடைய குழந்தையுடன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நிலையில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்தியா நேற்று அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து வெற்றி பெற உதவினார்.

இந்நிலையில் இந்த போட்டியை தாம் நேரில் பார்த்ததாக அதே பாகிஸ்தான் ரசிகர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்த அமெரிக்காவை அப்போட்டியில் வீழ்த்திய இந்தியா தம்முடைய இதயத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு:- "இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக நான் என்னுடைய டிராக்டரை 3000 டாலர்களுக்கு விற்றேன். ஆனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால் பொது ரசிகர்கள் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தனர். அதனால் இன்று நான் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உணர்ந்தேன். இன்று சூர்யகுமார் என்னுடைய இதயத்தை வென்றார். டிராக்டரை விற்று செலவு செய்த பணத்தை தற்போது இந்தியா மதிப்பாக்கியுள்ளது" என்று கூறினார்.

#WATCH | New York, USA: “I sold my tractor for $3000 to watch the India vs Pakistan match, in which we lost. I was very disappointed… Surya has won my heart today. Tractor ke paise India ne vasool karva diye,” says a Pakistani fan on India’s win against US in the T20 World Cup. pic.twitter.com/9wJdoOjpRS

— ANI (@ANI) June 13, 2024

அந்த வகையில் பாகிஸ்தான் ஏமாற்றினாலும் இந்தியா தம்மை ஏமாற்றவில்லை என்று அந்த ரசிகர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024