டி.என்.பி.எல். கிரிக்கெட் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கோவை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் (26 ரன்கள் 8 பந்துகள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார். சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சேலம் களம் இறங்கியது. ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

You may also like

© RajTamil Network – 2024