டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..! 344 ரன்கள்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.

டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது.

ஐபிஎல் அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 15 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க:ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!

இதற்கு முன்பு நேபாளம் மங்கோலியாவுக்கு எதிராக ஆசிய போட்டிகளில் 314 ரன்கள் எடுத்திருந்தது உலக சாதனையாக இருந்தது.

ஜிம்பாப்வே அணி மொத்தமாக 27 சிக்ஸர்கள், 30 பவுன்டரிகள் 20 ஓவர்களில் அடித்து அசத்தியுள்ளது.

சிக்கந்தர் ராஜாவின் 15 சிக்ஸர் உலக சாதனையில் சேரவில்லை. சஹில் சௌஹான் ஏற்கனவே 18 சிக்ஸர்கள் அடித்ததுதாம் முதலிடத்தில் இருக்கிறது.

இதையும் படிக்க: சமூகவலைதள விமர்சனங்களால் கவலையில்லை..! கே.எல்.ராகுலை நம்பும் கம்பீர்!

14.4 ஓவர்களில் காம்பியா 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிக்கந்தர் ராஸா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Dion Myers and Sikandar Raza stand out as Zimbabwe beat Rwanda by 149 runs. #T20AfricaMensWCQualifierBpic.twitter.com/LU1PT5GSNx

— Zimbabwe Cricket (@ZimCricketv) October 22, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024