Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை; ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர் விலகல் – மாற்று வீரர் அறிவிப்பு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஆப்கானிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாயை சேர்த்து கொள்ள ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது.

காபூல்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் எஞ்சிய டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முஜீப் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாயை சேர்த்து கொள்ள ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது.

Injury rules out Afghanistan spinner.
There’s been a squad change at the #T20WorldCup ⬇️https://t.co/4W9j4brNPS

— T20 World Cup (@T20WorldCup) June 14, 2024

You may also like

© RajTamil Network – 2024