டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்
நியூயார்க்,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் லீக் ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (டி பிரிவு) சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
நெதர்லாந்து:
மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், பால் வான் மீகெரென், விவியன் கிங்மா.
தென் ஆப்பிரிக்கா:
குயின்டன் டி காக்(டபிள்யூ), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம்(சி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னீல் பார்ட்மேன்.