Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பரூக்கி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பரூக்கி மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டிரினிடாட்,

உச்சகட்ட பரபரப்பை நெருங்கியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று அரையிறுதியின் 2-வது ஆட்டம் மற்றொன்று இறுதிப்போட்டி.

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி 1 விக்கெட் வீழ்த்தினார். இது நடப்பு சீசனில் அவர் கைப்பற்றிய 17 விக்கெட்டாக பதிவானது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் ஹசரங்கா 16 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள பரூக்கி புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. பசல்ஹாக் பரூக்கி – 17 விக்கெட்டுகள்

2. ஹசரங்கா – 16 விக்கெட்டுகள்

3. அஜந்தா மெண்டிஸ்/ வனிந்து ஹசரங்கா/ அர்ஷ்தீப் சிங் – 15 விக்கெட்டுகள்

இதில் இந்திய வீரரான அர்ஷ்தீப் சிங்கிற்கு குறைந்தபட்சம் 1 போட்டி எஞ்சியுள்ளதால் பரூக்கியின் இந்த சாதனையை அவர் தகர்க்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024