Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

by rajtamil
Published: Updated: 0 comment 23 views
A+A-
Reset

இந்திய நேரப்படி நாளை காலை நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நாளை காலை நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. தரோபாவில் காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதுவரை விளையாடி உள்ள 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிடத்தில் உள்ளது.நியூசிலாந்து அணி விளையாடிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்த போட்டி நியூசிலாந்து அணிக்கு முக்கிய போட்டியாகும்.

அதேவேளையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும்.

You may also like

© RajTamil Network – 2024