Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஜோர்டன் – அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆல் அவுட்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இங்கிலாந்து – அமெரிக்கா மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவன் டெய்லர், அண்டிரிஸ் களமிறங்கினர். அண்டிரிஸ் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாப்லி பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அடுத்துவந்த நிதிஷ் குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர் டெய்லர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் நிதிஷ் குமார் 30 ரன்னிலும், பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அமெரிக்கா 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் 19வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

19வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய ஜோர்டன், 2வது பந்தில் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்து வீசிய 3 பந்துகளிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோர்டன் 2.5 ஓவரில் 10 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024