டி20 கிரிக்கெட்: ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த நிக்கோலஸ் பூரன்

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் – பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து 176 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பார்படாஸ் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 30 ரன் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய நிக்கோலஸ் பூரன் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், உள்ளூர், டி20 லீக்குகள்) ஒரு ஆண்டில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை (2036 ரன்) பின்னுக்கு தள்ளி நிக்கோலஸ் பூரன் (2059 ரன்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல்:

நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) – 2059 ரன் (2024)

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 2036 ரன் (2021)

அலெக்ஸ் ஹேலஸ் (இங்கிலாந்து) – 1946 ரன் (2022)

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) – 1833 ரன் (2023)

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 1817 ரன் (2022)

Related posts

பாண்ட்யா இல்லை.. மும்பை தக்கவைக்க வேண்டியது அந்த 3 வீரர்களை மட்டும்தான் – இந்திய முன்னாள் வீரர்

பென் டக்கெட் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

விராட் மட்டும் போதும்… மற்ற அனைவரையும் கழற்றி விடுங்கள் – பெங்களூரு அணிக்கு ஆர்பி சிங் அட்வைஸ்