Sunday, September 22, 2024

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த ஜிம்பாப்வே

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கிடையே முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 102 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அசத்தினர். இதன் மூலம் 13 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வென்ற அணியாக ஜிம்பாப்வே மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 127 ரன்கள் கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும். தற்போது ஜிம்பாப்வே அதனை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024