டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் : கே.பாலகிருஷ்ணன்

டெல்டா மாவட்டங்களில் சம்பா
சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் : கே.பாலகிருஷ்ணன்டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமான தண்ணீா் கடலில் கலக்கும் சூழலில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீா் வரவில்லை என விவசாயிகள் ஏங்கி வருகின்றனா்.

டெல்டா மாவட்டங்களின் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தூா்வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீா் திறக்கவில்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். வழக்கமாக ஜூன்-12- ஆம் தேதிக்குள் மேட்டூா் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டம் முழுவதும் தண்ணீா் திறந்து விட வேண்டும். ஆதலால் இதற்கு முன்பே தூா்வாரும் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் வரை தூா்வாரும் பணி நடப்பதால், மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்பட்டபோதும், பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையை நீா்வளத் துறை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளது கண்டனத்துக்குரியது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன ஆறுகளிலும் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!