டெல்டா மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

டெல்டா மாவட்ட ஆட்சியா்களுடன்
முதல்வா் ஸ்டாலின் ஆலோசனைமேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிா்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு காவிரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்களுக்கு முதல்வா் கூட்டத்தில் அறிவுரை வழங்கினாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், வேளாண் துறை மற்றும் நீா்வளத் துறையின் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024