டெல்லியில் இன்று 9வது நிதி ஆயோக் கூட்டம்.. யாரெல்லாம் பங்கேற்கின்றனர்?

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

டெல்லியில் இன்று 9வது நிதி ஆயோக் கூட்டம்.. பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது! – யாரெல்லாம் பங்கேற்கின்றனர்?மோடி

மோடி

டெல்லியில் 9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று கூடுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ள நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கடந்த 2015 ஆண்டு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவரை 8 முறை கூடியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் 9வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது.

விளம்பரம்

மத்தியில் 3வது முறையாக பாஜக தலையிலான அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டி நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இதேபோன்று, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் புறக்கணித்தனர். டெல்லி மாநில அரசும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளது

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதுதொடர்பாக முன்பே பிரதமருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.

விளம்பரம்

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? – எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அதிரடி கேள்வி!

இப்படி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பங்கேற்பதாக அறிவித்துள்ளார். டெல்லிலியில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தின் மீது பாஜகவினரின் பாகுபாட்டை எடுத்துரைக்கவே பங்கேற்பதாகவும், தேவைப்பட்டால் வெளிநடப்பும் செய்வேன் எனவும் கூறியுள்ள அவர், திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டிய தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

இதற்கிடையே, புதுச்சேரி முதலமைச்சரும் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Modi
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024