Wednesday, November 6, 2024

டெல்லி-மும்பை விரைவுச்சாலை பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிக்கப்படும்!

by rajtamil
Published: Updated: 0 comment 50 views
A+A-
Reset

டெல்லி-மும்பை விரைவுச்சாலை பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிக்கப்படும்- நிதின் கட்கரி!டெல்லி-மும்பை விரைவுச்சாலை பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிக்கப்படும்- நிதின் கட்கரி!

டெல்லி-மும்பை இடையே பயணிப்பவர்ளுக்கு ஒரு நல்ல செய்தி: இந்தியாவின் மிக நீளமான பசுமை வழி விரைவுச் சாலையான தில்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே பணிகள் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்ட தகவல் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 1,386 கிமீ நீளம் கொண்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலையை 53 பேக்கேஜ்களில் அமைக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

விளம்பரம்

“2024-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மொத்தம் 26 தொகுப்புகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன” என்று கட்கரி தெரிவித்தார். இப்பணியின் கட்டுமான முன்னேற்றம் 82 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக இதுவரை 1,136 கிமீ நீளம் கட்டப்பட்டுள்ளதாகவும் கட்கரி கூறியுள்ளார்.

“ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் நிறைவு தேதி மாற்றியமைக்கப்படும் தற்போது அக்டோபர் 2025-க்குள் நிறைவடையும் என திருத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய பொருளாதார மையங்களுக்கு இந்த எக்ஸ்பிரஸ்வே விரைவான இணைப்பு வழங்குகிறது.

விளம்பரம்

விரிவான திட்ட அறிக்கையின் (DPR) படி, டெல்லியிலிருந்து மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (JNPT) வரை சுமார் 180 கிமீ தூரம் குறைப்பது மற்றும் இணைக்கப்பட்ட இடங்களுக்கு இடையேயான பயண நேரம் 50 சதவீதம் வரை குறைப்பு ஆகியவை அடங்கும். நாடாளுமன்றத்தில் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த கட்கரி, ஜூன் 30, 2024 நிலவரப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 983 கட்டண சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக தெரிவித்தார்.

டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்?

விளம்பரம்

டெல்லி-மீரட் விரைவுச் சாலையில், சாலையில் நடந்து சென்ற சில கன்வாரியாக்கள் மீது கார் மோதியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இங்குள்ள போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மோடிநகரின் கத்ராபாத் கிராமத்தில் இருந்து காசியாபாத் மாவட்டத்தின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலிருந்து மீரட் சாலை முச்சந்தி, மோகன் நகர், லோனி சாலை, இணைப்புச் சாலை, உ.பி-டெல்லி எல்லையில் உள்ள தில்ஷாத் தோட்டம் வரை சாலையில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் போலீஸ் கமிஷனர் அஜய் குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.

விளம்பரம்

“இந்த போக்குவரத்து திட்டத்தை செய்லபடுத்தும் விதமாக, சிவில் மற்றும் போக்குவரத்து போலீசார் கூடுதல் விழிப்புடன் இருப்பார்கள். மக்கள் வெளியேறும் இடத்தில், அந்தப் பகுதியின் சிவில் சமூகங்களின் தன்னார்வத் தொண்டர்கள் காவல்துறைக்கு உதவுவார்கள். அதோடு அப்பகுதியில் ஏதேனும் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்றால் உடனடியாக இவர்கள் தகவல் கொடுப்பார்கள், ”என்று மிஸ்ரா கூறினார்.

Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

சனிக்கிழமையன்று, கார் மோதியதாகக் கூறி ஆத்திரமடைந்த கன்வாரியாக்கள், அந்த வாகனத்தின் ஓட்டுனரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளதோடு காரையும் மோசமாக சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. கார் உரிமையாளரான முராத்நகரைச் சேர்ந்த நௌபஹர் சிங் (40) என்ற நபரும் சம்பவம் நடந்தபோது வாகனத்தில் இருந்துள்ளார். ஓட்டுனர் குடிபோதையில் சாலையின் தவறான பக்கத்தில் காரை ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறுகிறார் மிஸ்ரா.

விளம்பரம்

இந்த சம்பவத்திற்கு பின்னர் கன்வாரியாக்கள் டெல்லி-மீரட் விரைவுச் சாலையை மறித்து பிரச்சனை உருவாக்கினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
Mumbai
,
Nitin Gadkari

You may also like

© RajTamil Network – 2024