டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்தார். மேலும், அவர் வீரேந்திர சேவாக், ஜாக் காலிஸ், ஸ்டீவ் வாக் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 97 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோ ரூட் 172* ரன்களும், ஹாரி புரூக் 132* ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 150 ரன்களைக் கடந்த போது ஜோ ரூட் அதிக 150 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 150* ரன்கள் அடித்தவர்கள்

  1. சச்சின் டெண்டுல்கர் -20

  2. பிரையன் லாரா -19

  3. குமார் சங்ககரா -19

  4. டான் பிராட்மேன் -19

  5. எம் ஜெயவர்த்தனே -16

  6. ஜோ ரூட் -15*

  7. ரிக்கி பாண்டிங் -15

  8. வீரேந்திர சேவாக் -14

  9. ஜாக் காலிஸ் -14

  10. ஸ்டீவ் வாக் -14

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024