Saturday, September 21, 2024

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டை கொண்டாட சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தும் ஆஸ்திரேலியா

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டை கொண்டாட இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட உள்ளது.

மெல்போர்ன்,

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Age-old rivals Australia and England will face off in a commemorative one-off match to celebrate 150 years of Test cricket Details https://t.co/r8wKK0Pr9F

— ICC (@ICC) August 18, 2024

You may also like

© RajTamil Network – 2024