Tuesday, October 1, 2024

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள்: சாதனைப் பட்டியலில் விராட் கோலி!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சர்வதேச கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் சாதனைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விராட் கோலி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை அடித்த இந்தியாவின் ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் எத்தனை தொடர்கள் உள்ளன தெரியுமா?

இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இந்த அபாரமான சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் தொடங்கும் முன்பு, விராட் கோலி 1000 பவுண்டரிகளை எட்டுவதற்கு 7 பவுண்டரிகள் தேவைப்பட்டன. முதல் இன்னிங்ஸில், அவர் 47 ரன்கள் எடுத்த போது 4 பவுண்டரிகள் அடித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில், அவர் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்த போதும் 4 பவுண்டரிகளை அடித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி!

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக 4-கள் அடித்தவர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் -2058

  • ராகுல் டிராவிட்-1654

  • வீரேந்திர சேவாக்-1233

  • விவிஎஸ் லட்சுமணன்-1135

  • சுனில் கவாஸ்கர்-1016

  • விராட் கோலி -1000*

முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்!

உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக 4-கள் அடித்தவர்கள்

  1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) -2058

  2. ராகுல் டிராவிட் (இந்தியா) -1654

  3. பிரையன் லாரா (மே.இ.தீவு) -1559

  4. ரிக்கி பாண்டிங் (ஆஸி) -1509

  5. குமார் சங்ககாரா (இலங்கை) -1491

  6. ஜாக்குவஸ் காலிஸ் (தெ.ஆ.) 1488

  7. குக் (இங்கிலாந்து) -1442

  8. ஜெயவர்த்தனே (இலங்கை) -1387

  9. ஜோ ரூட் (இங்கிலாந்து) -1343

  10. சந்தர்பால் (மே.இ.தீவு) -1285

100 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்தோம்: ரோஹித் சர்மா

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024