டெஸ்ட் கிரிக்கெட்: 92 வருடங்களில் முதல் முறை… சாதனை படைத்த இந்தியா

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இந்தியா கடந்த 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது.

சென்னை,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் சாண்டோ தனி ஆளாக போராட, மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியையும் சேர்த்து கடந்த 92 வருடங்களில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியை விட அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 1932-ம் ஆண்டு முதல் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை 580 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 179 வெற்றிகளையும் 178 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிந்தன. 1 போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024